CLOSE

செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது

செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது

அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை எதிர்வரும் 01.09.2026 முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை,  அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலகபிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். அன்று முதல் செல்போன்கள் இத்திருக்கோயிலுக்குள் எதிர்வரும் 01.09.2026 இத்திருக்கோயிலுக்குள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.

இத்தகவல் குறித்து இத்திருக்கோயில் மூலம் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி,  அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வருகைபுரியும் பக்தர்கள் 01.09.2026 அன்று முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் (அலைபேசி) எடுத்து செல்வது தடைவிதிக்கப்படவுள்ளதால், செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறும், பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச்செல்ல ஏதுவாக, திருக்கோயிலின் கிழக்கு இராஜகோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை (அலைபேசிகளை) ரூ.5/- கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு, டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சுவாமி-அம்மன் தரிசனம் முடிவுற்று திரும்பியவுடன் டோக்கன் காண்பித்து செல்போன்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த உத்தரவினை மீறி திருக்கோயிலுக்குள் மறைமுகமாக எடுத்துச்செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருக்கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy