முழுமையாக நிரம்பும் கர்நாடக அணைகள்.. ஆனாலும் தமிழகத்துக்கு நீர் விடாத டிகே சிவக்குமார்! இதோ டேட்டா

முழுமையாக நிரம்பும் கர்நாடக அணைகள்.. ஆனாலும் தமிழகத்துக்கு நீர் விடாத டிகே சிவக்குமார்! இதோ டேட்டா

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தமிழகத்துக்கு காவிரி நீர் ஆதாரமாக இருக்கும் ஹாரங்கி, ஹேமாவதி, கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் இன்னும் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் அதுபற்றி விளக்கம் அளித்தள்ளார்.

ஆனால் உண்மையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்கும் அணைகள் ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதும். ஆனாலும் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் இன்னும் தண்ணீர் திறக்காமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.  

 கர்நாடகாவை எடுத்து கொண்டால் காவிரியில் நீருக்கு ஆதாரமாக மொத்தம் 4 அணைகள் உள்ளன. ஒன்று ஹாரங்கி. 2வது ஹேமாவதி. 3வது கேஆர்எஸ். 4வது கபினி.   

இதில் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து கேஆர்எஸ் அணைக்கு தண்ணீர் வரும். அதன்பிறகு கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். அதேபோல் கபினி அணையில் இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது இதில் 3 அணைகள் முழு கொள்ளவை எட்டி உள்ளன.   

அதன்படி இன்று காலை நிலவரப்படி ஹாரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடியாகும். இதில் இனுறு அணையின் நீர்மட்டம் 2,857.83 அடியை எட்டி உள்ளது. இன்னும் 2 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அதேபோல் ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2922 அடியாகும். தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 2,909 அடியை எட்டி உள்ளது. இன்னும் 13 அடி மட்டுமே பாக்கி உள்ளது.   
 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy